கஞ்சாவுடன் மூவர் கைது

0
236

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி, ஓடாவியார் வீதி, மற்றும் கலைமகள் வித்தியாலய வீதி ஆகிய இடங்களில் கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறப்பட்ட இந்த மூன்று பகுதிகளுக்கும் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினர் அங்கிருந்து கஞ்சாவுடன் திங்கட்கிழமை 07.02.2016 மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

களுவன்கேணியிலுள்ள வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 32 வயதான நபரிடமிருந்து 2800 மில்லி கிராம் கஞ்சாவும், ஓடாவியார் வீதியில் கைதான 25 வயதான இளைஞரிடமிருந்து 2000 மில்லி கிராம் கஞ்சாவும், கலைமகள் வித்தியாலய வீதியில் கைதான 26 வயது நபரிடமிருந்து 2800 மில்லிகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY