பாகிஸ்தான் முன்னால் வேகப்பந்து வீச்சாளர் ஏன் இந்திய அணியை புகழ்ந்து பேசுகிறார்: காரணம் இதுதான்

0
377

இந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாய்ப்புள்ள அணிகள் பற்றிய தனது கணிப்பை இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் வெளியிட்டுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

குரூப் 2-ல் இந்தியா, நியூசிலாந்தும், இன்னொரு பிரிவில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசும் அரைஇறுதிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பாகும். ஆனால் கிண்ணத்தை வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 2007-ம் ஆண்டை போல் இந்திய அணி மீண்டும் வெற்றி வாகை சூடும். தற்போது இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அணிச்சேர்க்கையும் அபாரமாக இருக்கிறது.

சமீப காலமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் சொல்வது கடினம். ஆனால் ஒன்றை சொல்லி விடலாம். இப்போது பாகிஸ்தானை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இதே போல் பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவிடம் திறமை நிறைய இருக்கிறது.

அண்மை காலமாக இந்திய அணி நன்றாக செயல்படுவதற்கு, ஆக்ரோஷமான பாணி உதவிகரமாக இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அப்படி சொல்ல முடியாது. வெறும் ஆக்ரோஷமாக ஆடுவதால் மட்டுமே வெற்றி வந்து விடாது. ஒட்டுமொத்தத்தில் நன்றாக செயல்படுவதன் மூலமே வெற்றி கிடைக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட்டை ரொம்பவும் புகழ்ந்து பேசுகிறார். அவர் இந்தியாவை இவ்வளவு புகழ்ந்து பேசுவதை இதற்கு முன்பு யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் இந்தியாவில் பணம் சம்பாதிக்க தொழில் செய்ய விரும்புவதே இந்த மாற்றத்துக்கு காரணம். நான் விளையாடிய காலத்தில் அவர் பந்து வீசும் போது, எந்த கருணையும் இருக்காது. பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும் போலும்.

இவ்வாறு ஷேவாக் கூறினார்.

LEAVE A REPLY