ஆசிய கிண்ண இறுதி போட்டி: 5 ஓவர்கள் குறைப்பு

0
161

இந்தியா – வங்காளதேசம் மோதும் ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் மழை குறிக்கிட்டதால் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று போட்டி தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் வங்காளாதேசத்தின் மிர்புரில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதனை அடுத்து மைதானம் பாய்களால் மூடப்பட்டது. மழை நின்றதும் மைதானத்தில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்ட பின்னர் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய பவன் நெகி, ஹர்பஜன் சிங் மற்றும் புவனேஷ் குமார் ஆகியோ நீக்கப்பட்டு அஸ்வின், நெஹ்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

LEAVE A REPLY