இரத்தினபுரி மாவட்டத்தில் இரு தடவை நில அதிர்வு

0
148

பலாங்கொடை பகுதியில் இன்று (06) அதிகாலை மற்றும் மதியம் இரு சிறிய அளவிலான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மேலும், பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில் சிறிய அளவிலான அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க ஆழப்படுத்தல் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நில அதிர்வு காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY