முரளிதரன் பந்துவீச்சை அடித்து நொறுக்கியதை மறக்க முடியாது: அப்ரிடி

0
270

2009ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியை தன்னால் மறக்க முடியாது என்று பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களே எடுத்தது.

இதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடி 18.4 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 139 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்தப் போட்டியின் நினைவுகளை மறக்க முடியாது என்றும், தனக்கு சிறப்பான போட்டியாக அமைந்ததாகவும் அப்ரிடி கூறியுள்ளார்.

அவர் மேலும், கூறுகையில், ”நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடும் போது அரங்கமே எங்களுக்கு உற்சாகம் அளித்தது. நாடே போற்றியது. அப்போது எனது வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி எல்லாம் பறந்தது.

நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். இலங்கை அணியின் இலக்கை விரட்டும் போது எந்தவொரு சிக்கலும் இல்லை. முரளிதரனின் சுழற்பந்தை சிக்சருக்கு விரட்டியது இன்னும் நினைவில் உள்ளது.

இப்போது கூட எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் இணையத்தில் அந்த வீடியோவை பார்த்து பெருமைப்பட்டுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

அந்தப் போட்டியில் அப்ரிடி 40 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சர் என 54 ஓட்டங்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

 

LEAVE A REPLY