ஆசிய கிண்ண இறுதிப்போட்டி தொடங்கவிருந்த நிலையில் மிர்ப்பூரில் மழை

0
235

ஆசியக்கிண்ணடி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி  இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா- வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் வங்காள தேசம் அணியை இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவதால் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று போட்டி தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் வங்காளாதேசத்தின் மிர்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதனை அடுத்து மைதானம் பாய்களால் மூடப்பட்டது.

சற்று முன் நிலவரப்படி மழை நின்றுவிட்டதாகவும், பாய்கள் அகற்றப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மழை காரணமாக போட்டித் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இருக்குமா என்பது விரைவில் தெரியும்.

LEAVE A REPLY