ஓய்வு பெறுகிறார் வங்கதேச அணித்தலைவர் மெர்டசா

0
179

உலகக்கிண்ண டி20 தொடரோடு வங்கதேச அணியின் தலைவர் மெர்டசா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார்.

தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு தலைவராக இருக்கும் மெர்டசா, கடந்த 2001ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

இவர் வங்கதேச அணியில் 15 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் உலகக்கிண்ண டி20 தொடரோடு ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

இது குறித்து மெர்டசா கூறுகையில், கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் எண்ணம் இல்லை. இறைவன் மனது வைத்தால் இந்த ஆண்டு முழுவதும் விளையாடலாம்.

மேலும், 2017ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி, 2018ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணம் ஆகியவற்றில் பங்கேற்பது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY