வங்காள தேச அணியை சாதாரணமாக கருதவில்லை: டோனி

0
303

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதுகின்றன.ஆசிய கோப்பையை இந்திய அணி 6–வது முறையாக கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கிண்ண ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 முறை பட்டம் வென்று இருந்தது. இந்திய அணி வங்காள தேசத்தை ‘லீக்’ ஆட்டத்தில் 45 ரன்னில் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.வங்காள தேசம் ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இருந்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணி கூடுதல் பலத்துடன் உள்ளது. இந்திய அணிக்கு வங்காளதேசம் எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இறுதிப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:–வங்காளதேச அணியை நாங்கள் ‘லீக்’ ஆட்டத்தில் வென்று இருந்தோம். ஆனால் அதை வைத்து எதுவும் கூறிவிட இயலாது. நாங்கள் அந்த அணியை சாதாரணமாக கருதவில்லை. வங்காளதேசத்தை நாங்கள் மதிக்கிறோம். அந்த அணியை குறைத்து மதிப்பிடவில்லை. இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்தியாவுக்குத்தான் ஆசிய கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக வங்காளதேச கேப்டன் மொர்தாசா தெரிவித்து உள்ளார்.இந்த நிலையில் வங்காளதேச ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வங்காளதேச அணி இந்தியாவை வீழ்த்தி விடும் என்பது போல சித்தரிக்கும் விதமாக அந்நாட்டு வேகப்பந்து வீரர் தஸ்கின் அகமதுவின் கையில் டோனியின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பது போன்று அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தின் தாக்கம் இறுதிப்போட்டியில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY