தாய்லாந்தில் படகு என்ஜின் வெடித்தது 60 பேர் காயம்

0
223

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படகு போக்குவரத்து முன்னிலை வகிக்கிறது. வாட் தெப்பேலயிலா பியர் கால்வாய் பகுதியில் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த படகின் என்ஜின் வெடித்தது. இதனால் படகு நொறுங்கி உதிரி பாகங்கள் சிதறின.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. என்ஜினில் ஏற்பட்ட எண்ணை கசிவே விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY