இன்னும் 24 மணி நேரத்தில் தூள்தூளாகும்: கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
258

மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலைவந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான நிலைய மேலாளருக்கு ‘இமெயில்’ மூலம் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் ’அடுத்த 24 மணிநேரத்தில் விமான நிலையம் வெடித்துச் சிதறி தூள்தூளாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அனுப்பப்பட்டதாக கருதப்படும் இந்த மிரட்டல் கடிதத்தையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மோப்ப நாய்களின் துணையுடன் விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர். பயணிகளின் கார்கள் மற்றும் உடைமைகள் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால் பயணிகள் மத்தியிலும் இன்று காலை பீதி ஏற்பட்டது.

LEAVE A REPLY