அல்-ஹம்ரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்க்க மாகாண சபை உறுப்பினர் அன்வர் நடவடிக்கை

0
177

திருமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இறக்க கண்டி அல்-ஹம்ரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2016.03.05ஆந்திகதி பி.ப. 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் சலாஹுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக திருகோணாமலை வலயக்கல்வி பணிப்பாளர் திரு. விஜேந்திரன் மற்றும் குச்சவெளி பிரதேச கோட்ட கல்வி அதிகாரி திரு. செல்வநாயகம் அவர்களும் விசேட அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அன்சார், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ். இஸ்மாயில் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்…

இப்பாடசாலையில் நிலவுகின்ற பாடங்களுக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோருக்கு இவ்விடத்தில் கோரிக்கையினை வைப்பதோடு மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மேலதிகமாக பாடசாலைகளில் இருக்கும் ஆசிரியர்களை அல்-ஹம்ரா பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு துரிதகதியில் நியமிப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு ஏனைய பாடசாலைகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை தீர்க்க மாகாண கல்வி அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் 40ற்கும் அதிகமான ஆசிரியர்கள் மேலதிகமாக பாடசாலைகளில் இருப்பதாக நான் அறிந்து கொண்டேன் அத்தோடு ஆசிரியர் பற்றாக்குறைகளை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டாளும் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு இப்பாடசாலையிலுள்ள குறைகளை முன்னைய காலங்களில் கண்டறிந்து தன்னாலான நிதி ஒதிக்கீடுகளை இப்பாடசாலைக்கு வழங்கியதோடு, இப்போதைக்கு இப்பாடசாலையின் குறைபாடாகவுள்ள வாத்தியக்குழுவினருக்கான வாத்திய உடையினை தனது நிதி ஒதிக்கீட்டிலிருந்து பெற்றுத்தருவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

இறுதியில் விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY