வழக்குகள் தொடர்பில் ஞானசார தேரர் கவலை

0
99

எம்மை தூக்கு மரத்துக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். அதன் வெளிப்பாடே ஒவ்வொரு நாளும் நீதிமன்றம் நீதிமன்றமாக நாம் அலைந்துகொண்டிருக்கின்றோம் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற அல்குர்ஆன் அவமதிப்பு தொடர்பான வழக்கின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் பேசினால் பொலிஸார் மூலம் அச்சுறுத்தப்படுகின்றோம். பொலிஸாரின் கையில் சட்டம் உள்ள நிலையில் அவர்கள் அதன் அத்தியாயங்களைப் பயன்படுத்தி எமக்கு எதிராக செயற்படுகின்றனர். இந் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். என்றார்.

LEAVE A REPLY