ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வங்காளதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளையாடுவதில் சந்தேகம்

0
255

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது. இதில் இந்தியா-வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் வங்காளதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அல்-ஹசன் நேற்று பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது அவரின் தொடை பகுதியில் பந்து தாக்கியது. இதனை அடுத்து பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இன்று மீண்டும் அவர் பயிற்சியில் ஈடுப்பட முயன்ற போது வலியால் அவதிப்பட்டார். எனவே காயம் நாளை மாலைக்குள் குணம் அடையாதபட்சத்தில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY