புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு

0
183

மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி’ புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்கு படுத்தி புற்று நோயை அழிக்கும் முறைமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் (யு.சி.எல்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உள்ள சிறப்பான நோய்த்தடுப்பு செல்களான T- செல்கள், புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து அழிக்க வழி ஏற்படுத்துவதாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது.

இதன் மூலம் நோய் முற்றிய நிலையில்கூட, அதற்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை வழங்க முடியும் என்றும், ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பணச் செலவுமிக்க இந்த சிகிச்சை முறைமை, இன்னமும் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்படவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளினுள் அது மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமே எனத் தெரிவிக்கும் துறைசார் வல்லுனர்கள், ஆனாலும் இது ஒரு சிக்கலான முறை என தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய்க்கான இந்த புதிய கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் பல கண்டுபிடிக்கப்படலாம் என்ற நம்பிக்கையினை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்கு ஆதரவு வழங்கிய கான்சர் ரிசர்ச் யு.கே நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது.

LEAVE A REPLY