வினாவிடைப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலாமிடம்

0
151

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கல்வியமைச்சு, நடாத்திய வினாடிவினாப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

மாவட்ட மட்டத்தில் வினா விடைப்  போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 15 பாடசாலைகள் பங்குபற்றின. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய ரீ. நரேஸ்கர், ஏ. நெறஞ்சராஜ், பீ. ஜனார்த்தன், ஜே. சுகிர்தன், எம், டிலக்சன், ரீ. சுபேகரன் ஆகிய மாணவர்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டு களமிறக்கப்பட்டனர்.

இதன்மூலம் அகில இலங்கை ரீதியில் பங்குபற்றுவதற்கு எதிர்வரும் வாரங்களில் கொழும்பு செல்லவுள்ளதாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஜே.ஆர்.பீ. விமல்ராஜ் தெரிவித்தார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெறவிருக்கும் வினாவிடைப் போட்டியில் 52 பாடசாலைகள் பங்குபற்றவுள்ளன.

LEAVE A REPLY