கொன்பரன்ஸ் வீடியோ மூலம் டக்ளஸ் சாட்சியம்

0
194

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா 1986ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாட்டின் சூளை மேட்டில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக மூன்று தாசாப்தங்களுக்கு பின்னர் இலங்கைக்கான இந்திய தூதரகத்திலிருந்து சென்னை 4ஆவது மேலதிக செசன்ஸ் நீதிமன்றத்தில் கொன்பரன்ஸ் வீடியோ மூலம் ஆஜராகி சாட்சியமளித்தார்.

1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் திருநாவுகரசு என்பவரை சுட்டுக்கொலை செய்தமை, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா மீது இந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். குறித்த வழங்கு சென்னை 4ஆவது மேலதிக செசன்ஸ் நீதிமன்றத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இத்தருணத்தில் டக்ளஸ் தேவாந்தா பிணையில் இலங்கைக்கு திரும்பியிருந்ததாலும் அசாதாரண சூழல் நிலைமைகள் தொடர்ந்து நிலவியதாலும் நீதிமன்றத்தின் அழைப்பாணையை ஏற்று மன்றில் சமுகமளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

நீதிமன்றின் அழைப்பாணையை தொடர்ச்சியாக டக்ளஸ்தேவானந்த நிராகரித்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அவர் இந்தியாவுக்குச் சென்றிருந்த போதும் இராஜதந்திர ரீதியான பயணத்தினால் அவர் கைது செய்யப்படும் உத்தரவு விலக்களிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ஊடாக காணொளி மூலம் ஆஜராகி சாட்சியமளிக்க அனுமதியளிக்குமாறும் பிரதிவாதியான டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி குறித்த வழக்கு 4ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.பிரபாவதி, இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், காணொளிக்காட்சி மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்த நீதிபதி எம்.சாந்தி குறித்த தினமன்று முற்பகல் 10மணிக்கு காணொளி மூலம் சாட்சியமளிப்பதற்கான உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று சனிக்கிழமை ஐந்தாம் திகதி இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தில் காணொளி மூலமாக கே.என்.டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளித்திருந்தார்.

LEAVE A REPLY