வெலிகமயில் ரோல்ஸ் சாப்பிட்ட குடும்பமே வைத்தியசாலையில்; 10 வயது மகன் உயிரிழப்பு

0
198

உணவு விசமானதால் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 வயதுடைய ஒரு பிள்ளை உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிகமயில் இடம்பெற்றுள்ளது.

வெலிகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடந்த 2ம் திகதி அவர்கள் ரோல்ஸ் சாப்பிட்டிருப்பதுடன், அதன் பின்னர் வயிற்றோட்டம், மயக்கம் போன்றன ஏற்பட்டிருப்பதாக மாத்தறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பல தனியார் வைத்திய நிலையங்களில் அவர்கள் மருத்துவம் செய்துள்ளதுடன், வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள தந்தை (37), தாய் (32) 13 மற்றும் 07 வயதுடைய இரண்டு மகன்களும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

அத்துடன் அவர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் கிணற்று நீர் விஷமாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY