என் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான நடுவர்களின் முடிவை பார்த்ததில்லை: வாசிம் அக்ரம்

0
6284

வங்காள தேசத்தில் ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரில் நடுவர்களின் முடிவு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடும் போது டோனி பிடித்த கேட்சுக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். விராட் கோலி பேட்டிங் செய்யும்போது ஆமிர் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். 49 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டிங் பந்து உரசிச் சென்ற நிலையில் எல்.பி.டபிள்யூ. கொடுத்து விட்டார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் பெரேரா ஸ்டமிங் கிடையாது. ஆனால், நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இதுபோன்று நடுவர்கள் ஏராளமான தவறுகளை செய்தனர்.

இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான வாசிக் அக்ரம் கூறுகையில் ‘‘எனது வாழ்நாளிலேயே இதுபோன்ற மோசமான நடுவர்களின் செயல்பாட்டை நான் பார்த்ததில்லை’’ என்றார்.

மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவிக்கு அப்ரிடி சிறந்த தேர்வு என்றார். ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறவில்லை என்பதால் அப்ரிடி மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY