மஞ்சள் கடவையில் விபத்து; 4 மாணவிகள் காயம்

0
354

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் நேற்று (04) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு மாணவிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பிரத்தியோக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் மாணவிகள் மஞ்சள் கடவையில் வீதியை கடக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கில்கள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நான்கு பாடசாலை மாணவிகளும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மூன்று மாணவிகள் வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரு மாணவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_1067 DSC_1071 DSC_1079

LEAVE A REPLY