சச்சின் – விராட் கோலி இருவரில் சிறந்த வீரர் யார்?: அப்ரிடி பதில்

0
452

ஆசிய கிண்ண 20 ஓவர் போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனாலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்று பாகிஸ்தான் இரண்டு வெற்றியுடன் திருப்தியடைந்தது.

இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடியிடம் செய்தியாளர் ஒருவர், சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் எவ்வளவு மதிப்பீடு தருவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அப்ரிடி:- “இதற்கு முன்னாலும் இதுபற்றி நான் கருத்து கூறி இருக்கிறேன். சச்சின் தெண்டுல்கருடன் யாரையும் ஒப்பிட முடியாது. லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கும், கிரிக்கெட்டை விரும்பும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் சச்சின் மிகச்சிறந்த ரோல் மாடலாக இருக்கிறார்.

விராட் கோலியும் சாம்பியன் வீரர்தான். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி மிக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இருவரும் (சச்சினும் கோலியும்) மிகச்சிறந்த வீரர்கள். நான் ஒருவருக்கு மேல் ஒருவரை உயர்த்தி வைக்க விரும்பவில்லை” என்றார்.

LEAVE A REPLY