மூதாட்டியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

0
197

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கடந்த 03.03.2016ம் திகதி பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பிள்ளையார் கோவில் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த மூதாட்டியை வழிமறித்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்று விட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நீதிமன்ற வீதி திருக்கோவில்-01 எனும் முகவரியில் வசிக்கும் ஏ. தவமணி (74) என்ற மூதாட்டி கடந்த 03.03.2016ம் திகதி பி.பகல் 2.00 மணியளவில் கல்லடியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு வரும்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூதாட்டி பிள்ளையார் கோவில் வீதியால் நடந்து வரும்போது அந்த வீதியால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் மூதாட்டியைத் தாக்கிவிட்டு அவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்று தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தை அவதானித்த சிலர் திருடர்களைத் துரத்திக்கொண்டு சென்றவேளை அவர்கள் வேகமாக தப்பியோடி மறைந்து விட்டனர். மேலும் அவர்கள் வந்த உந்துருளியின் வாகன இலக்கத்தினை மறைத்தவாறே அவர்கள் தப்பிச் சென்றதாக அவர்களைத் துரத்திச் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டிடங்கள் திணைக்களம், அரசாங்க அதிபரின் சுற்றுலா விடுதி, ஆயுள்வேத வைத்தியசாலை, கிறீன் காடன் விடுதி என பல அலுவலகங்களும், மக்கள் எப்போதுமே பரபரப்பாக நடமாடுகின்ற இந்தப் பிரதேசத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவமானது மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY