கோரகல்லிமடுவில் குடிசை எரிப்பு

0
176

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோரகல்லிமடு – பறங்கியாமடு எனும் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 04.03.2016 மாலை குடிசை ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் குடிசைக்குத் தீவைத்திருப்பதாக மனைவி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY