அணு ஆயுத திட்­டத்தை கைவி­டா­விட்டால் பிழைத்­தி­ருக்க முடி­யாது என்­பதை வட கொரி­யா­வுக்கு உணரச் செய்வோம்

0
196

அணுவட கொரி­யாவால் மேற்­கொள்­ளப்­படும் எந்­த­வொரு சின­மூட்­டத்­தக்க நட­வ­டிக்­கைக்கும் கடும் பதி­ல­டியைக் கொடுக்­க­வுள்­ள­தாக தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன் ஹை நேற்று வெள்­ளிக்­கி­ழமை சூளு­ரைத்­துள்ளார்.

வட கொரியத் தலைவர் கிம் யொங் – உன், அணு ஆயு­தங்­களை முன்­கூட்­டியே தாக்­கு­தல்­களை நடத்த தயார் நிலையில் வைத்­தி­ருக்க உத்­த­ர­விட்­டுள்­ள­தை­ய­டுத்தே தென் கொரிய ஜனா­தி­பதி இவ்­வாறு சூளு­ரைத்­துள்ளார்.

“வட கொரி­யா­வா­னது சின­மூட்டும் நட­வ­டிக்கை எதை­யா­வது மேற்­கொள்ளும் பட்­சத்தில், நாம் அந்­நாட்­டுக்கு கடும் தண் ­ட­னையை பதி­ல­டி­யாகத் தருவோம்” என புதி­தாக நிய­மிக்கப் ­பட்ட இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்­கான வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் பார்க் கெயுன் ஹை தெரி­வித்தார்.

“அணு ஆயுத நிகழ்ச்சித் திட்­டத்தைக் கைவி­டா­விட்டால் தமது ஆட்சி பிழைத்­தி­ருக்க முடி­யாது என்­பதை வட கொரி­யாவை உணரச் செய் வோம்” என அவர் கூறினார்.

“இது விடி­ய­லுக்கு முன்­ன­ரான இருள் மட்­டு­மே­யாகும். நாம் இப்­போது கொரிய தீப­கற்­பத்­தி­லான ஐக்­கி­யத்தை நோக்­கிய சிர­ம­மான முக்கியத்துவம் மிக்க இறுதிக் கட்டத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நான் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரி வித்தார்.

LEAVE A REPLY