தாய்லாந்து நாட்டின் முன்னாள் துணை பிரதமர் 101 வயதில் காலமானார்

0
120

தாய்லாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், முன்னாள் துணை பிரதமருமான தனட் கோமன்(101) காலமானார்.

தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு உருவானதில் முக்கிய பங்காற்றிய தனட் கோமன், சீனாவுடனான தாய்லாந்து நாட்டின் பனிப்போரை முடித்து வைத்து, வியட்நாம் போரின்போது அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தினார்.

9-5-1914 அன்று பிறந்த தனட் கோமன், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 1940-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் வேலையில் சேர்ந்தார்.

1946-47 ஆண்டுகளில் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் பணியாற்றி, பின்னர் தலைமைத்தூதராக பதவி வகித்தார். 1959-ம் ஆண்டு தாய்லாந்தின் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் இப்பதவியில் திறம்பட செயலாற்றினார்.

பின்னர், குடியரசுக் கட்சி என்ற பெயரில் தனி இயக்கத்தை தொடங்கி 1979-1982 ஆண்டுகளுக்கிடையில் தாய்லாந்து துணை பிரதமராகவும் பொறுப்பேற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக நின்ற தனட் கோமன் 1982-ம் ஆண்டில் இருந்து தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். இந்நிலையில், முதுமைசார்ந்த காரணங்களால் அவர் காலமானதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY