பத்தேகம துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

0
218

பத்தேகம, தெல்கஹ ஹந்திய பிரதேசத்தில் நபர் ஒருவர் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருப்பவர் ஹிக்கடுவை, கலூபே பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர்.

அண்மைய தினங்களில் நாட்டின் பல இடங்களில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு பாதாள உலக கோஷ்டியினர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY