காத்தான்குடி உணவு ஒவ்வாமை; காரணம் கண்டரியப்பட்டது

0
1104

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள உணவகமொன்றில் பகல் உணவாக புரியாணியை வாங்கிச் சென்று உட்கொண்டபோது ஏற்பட்ட ஒவ்வாமைக்கு “சல்மனல்லா” என்ற கிருமித்தாக்கமே காரணமென சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி பிரதேச உணவகமொன்றில் பகல் உணவாக புரியாணி உட்கொண்டவர்களில் 82 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த புரியாணியின் மாதிரி கொழும்பு, பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அந்த உணவின் கோழி முட்டையிலும் கோழி இறைச்சியிலும் சல்மனல்லா என்ற கிருமித்தாக்கம் காணப்பட்டதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த உணவகத்தை காத்தான்குடி சுகாதார அலுவலகம் மற்றும் காத்தான்குடி நகரசபை என்பன மூடியுள்ளதாகவும் அவர் கூறினார்.

(Tamilmirror)

LEAVE A REPLY