தாஜுடீன் வழக்கு விசாரணைகளுக்கென CCTV காணொளிகளை வழங்குமாறு டக்ளஸிற்கு உத்தரவு

0
266

தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கென பார்க் வீதியிலுள்ள டக்ளஸ் தேவானாந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தாஜுடீன் கொலை வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி நிஷாந்த பிரீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தாஜுடீன் கொலை வழக்கின் விசாரணைகளுக்கென 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பதிவான டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அலுவலக சி சி ரி வி காணொளிகளை வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த காணொளியை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY