பாலமுனை அலிகார் மஹா வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழா

0
196

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக் கல்வி பிரிவுக்குட்பட்ட பாலமுனை அலிகார் மஹா வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறுவர் தடகள விளையாட்டு விழா அண்மையில் பாலமுனை அலிகார் மஹா வித்தியாலத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.

பாலமுனை அலிகார் மஹா வித்தியாலத்தின் அதிபர் எச்.ஏ.றஸாக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிறுவர் தடகள விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்வை கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டார்.

மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இத் தடகள விளையாட்டு விழாவில் பச்சை நிறத்தில் போட்டியிட்ட ஹிறா இல்லம் 221 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், மஞ்சல் நிறத்தில் போட்டியிட்ட மர்வா இல்லம் 217 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், நீல நிறத்தில் போட்டியிட்ட சபா இல்லம் 216 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தன.

இதன் போது அதிதிகளினால் தடகள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், மாணவர்களுக்கும் கிண்ணங்களும், சான்றிதழும், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நீலம் பாய்தல், உயரம் பாய்தல், 50,75 மீட்டர் ஓட்டம், உடற்பயிற்சி போன்ற பல்வேறு தடகள விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

குறித்த பாலமுனை அலிகார் மஹா வித்தியாலத்தின் சிறுவர் தடகள விளையாட்டு விழாவுக்கு பாலமுனை நேஷனல் விளையாட்டுக் கழகம், பாலமுனை புதிய கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம், பாலமுனை இளைஞர் கழகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் தடகள விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பல்வேறு பாடங்களின் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய ஆசிரியர்கள், மாணவர்கள், அலிகார் மஹா வித்தியால பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், அலிகார் வித்தியாலய பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

6fe7a8d3-9834-49e5-885e-4c66e045310a fa94913c-6b57-4bad-871d-c36fbb8fb4df fb496f52-b869-480b-9576-239ac5d1ff1d

LEAVE A REPLY