வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாமல் ராஜபக்ச கூறியது இதுதான்

0
478

றகர் வீரர் வசீம் தாஜு­தீ­னுக்கும் எமக்கும் எந்­த­வி­த­மான முன் விரோ­தங்­களும் இல்லை. எமக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் காணப்­பட்ட உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்ட கொலைச்­குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­ற­தென அம்­ம­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ ­நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 52 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணி­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றமை, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­தி­ரக்­கட்­சியின் கூட்­டி­ணைந்து உரு­வா­கி­யுள்ள புதிய ஆட்­சியின் செயற்­பா­டுகள், றகர் வீரர் வசீம் தாஜு­தீனின் கொலை தொடர்பில் சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக நாமல் ராஜ­பக்ஷ எம்.பி கேச­ரிக்கு கருத்து வெளி­யி­டும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

றகர் வீரர் வசீம் தாஜு­தீ­னுக்கும் எமக்கும் எந்­த­வி­த­மான முன் விரோ­தங்­களும் இல்லை. அவரை கொலை­செய்­ய­பட்­டமை தொடர்­பான குற்­றச்­சாட்டில் எம்மை தொடர்பு படுத்தி தக­வல்­களை வெளி­யி­டு­கின்­றார்கள். அது முற்­றிலும் தவ­றா­னது. எமக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் காணப்­பட்ட உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றச்­சாட்டே அது­வாகும்.

அவ்­வாறு விரி­சலை ஏற்­ப­டுத்தி தேர்­தலில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பெறு­வதே எம்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­வர்­களின் நோக்­க­மா­க­வி­ருந்­தது. அதே­போன்று தமிழ் மக்­க­ளையும் எம்­மி­டத்­தி­லி­ருந்து விலகச் செய்­வ­தற்கும் அவ்­வா­றான சில திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள்.

நாம் அனைத்து இனங்­களும் இணைந்து ஒற்­று­மை­யுடன் இருப்­ப­தா­கவே விரும்­பினோம். ஆனால் அவர்கள் மத்­தியில் தவ­றான பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்து எம்­மி­டத்­த­ிலி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள் என்றார்.

LEAVE A REPLY