ஊழல் விவகாரம்: பிரேசில், முன்னாள் அதிபர் லூலாவுக்கு தடுப்பு காவல்

0
111

பிரேசில் நாட்டின் பொதுத் துறை எண்ணைய் நிறுவனமான பெட்ரோப்ராஸ் நிறுவனத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் அதிபர் சில்வா லூலா வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

சாவ் பாலோவில் உள்ள லூலா இன்ஸ்டிடியூட் உட்பட அதிபருக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், தொடர்ந்து லூலா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அப்போது லூலவிடம் தொடர்ந்து பலமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக, 2003லிருந்து 2011வரை லூலா டா சில்வா இரண்டு முறை பிரேசிலின் அதிபராக பதவிவகித்தார். பிரேசிலின் தற்போதைய அதிபராக இருக்கும் தில்மா ரூசெஃப், லூலாவின் தலைமைச் செயலராக இருந்தவர்.

LEAVE A REPLY