காத்தான்குடி ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில் அமைப்பதற்கு சிப்லி பாறூக்கினால் நிதி ஒதிக்கீடு

0
255

புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில் அமைப்பதற்காக முதல்கட்டமாக 200,000.00 ரூபாயும் இரண்டாம் கட்டமாக 150,000.00 ரூபாயும் கடந்த மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலுக்கு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பள்ளிவாயலின் சுற்று மதிலினை சம்பூர்ணமாக்குவதற்கு மூன்றாம் கட்டமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின், 2015ம் ஆண்டின் மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 115,000.00 ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது,

அதன் பிரகாரம் தற்பொழுது பள்ளிவாயலின் சுற்றுமதில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. சில தினங்களுக்கு முன்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சுற்று மதில் கட்டுமான பணியினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் சுற்று மதிலை நேர்த்தியாக அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

எதிர் காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி செயற்பாடுகளை இப் பள்ளிவாயலுக்கும், இப் பிரதேசத்திற்கும் முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

(எம்.ரீ. ஹைதர் அலி)

DSC_5060 DSC_5064 DSC_5069

LEAVE A REPLY