புடவைக்கட்டு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

0
195

12795411_10208371683319300_991684058757703383_nதிருமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குபட்ட புடவைக்கட்டு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி புடவைக்கட்டு பொது விளையாட்டு மைதானத்தில் 2016.03.03ஆந் திகதி பி.ப. 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி சலாம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவருமான கௌரவ. ஆர்.எம். அன்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக குச்சவெளி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி திரு. செல்வநாயகம், புடவைக்கட்டு கடற்படை பொறுப்பாளர், குச்சவெளி பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

இந்நிகழ்வுக்கு என்னை அதிதியாக அழைத்தமைக்கு இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளித்து விளையாட்டுத்துறையில் புகழ் வாய்ந்தவர்களாக எம்தாய் நாட்டிற்கு எதிர்காலத்தில் பெருமைகளை தேடித்தர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு, எதிர் காலத்தில் தன்னாலான உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக இல்ல விளையாட்டுப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும்,பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(எம்.ரீ. ஹைதர் அலி)

10177457_10208371680799237_4611598404544044225_n 12705647_10208371691239498_814784677643526952_n 12790935_10208371564116320_4356804484598076955_n 12795445_10208371685079344_5816275562264077304_n 12799069_10208371693479554_660434305932924701_n

LEAVE A REPLY