ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முதலமைச்சரால் உபகரணங்கள் கையளிப்பு

0
493

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது நிதியிலிருந்து ஒரு தொகுதி உபகரணங்களை இன்று (04) வெள்ளிக்கிழமை கையளித்தார்.

வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 12 நோயாளர் கட்டில்கள், 12 மெத்தைகள், நோயாளர்களின் பாவினைக்காக கட்டிலருகே அமைந்த 12 அலுமாரிகள் என்பன வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.

முதலைச்சரின் செயலாளர் யூ.எல். அப்துல் அஸீஸ், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, இந்நிகழ்வில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக், உட்பட வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

DSC02029 DSC02031

LEAVE A REPLY