உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்.

0
119

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறி பார்த்த கேமராவை துப்பாக்கி என பயந்து ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட் டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தை யும், வேதனையையும் வெளிக்காட்டியுள் ளது.

உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங் குள்ள மக்களை மொத்த உலகமும் கை விட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செய லாளர் பான் கி மூன் வேதனை தெரிவித் துள்ளார். சமீபத்தில், இங்குள்ள மக்களின் வாழ் க்கை நிலை குறித்து செய்தி சேகரிக்க காசாவை சேர்ந்த புகைப்பட நிருபரான நாடியா அபு ‘பான் என்பவர் சிரியாவில் உள்ள ஒரு நகரத்துக்கு சென்றிருந்தார்.

அங்கு குண்டு வீச்சில் சிதிலம் அடைந்த ஒரு பகுதிக்கு சென்ற அவர், ஒரு தெருவில் தனியாக சோகத்துடன் நின்றி ருந்த சுமார் 4 வயது சிறுமியை தனது கேமராவால் படம் பிடிக்க நினைத்தார். அதற்கான கோணத்தை தயார் செய்து, சிறுமியை கேமரா லென்சால் குறிபார்த் தார். துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்டவர்கள் எதிரியிடம் சரணடையும் பாணியில் கைகள் இரண்டையும் தனது தலைக்கு மேலே உயர்த்திய அந்த சிறுமி திகிலில் அழும் நிலைக்கு சென்று விட் டாள்.

நெஞ்சை பிழியும் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நாடியா அபு ‘பான், சிரியாவில் குழந்தைகளின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? என்பதை விளக்க இந்த புகைப்படமே உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

-MM-

LEAVE A REPLY