டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகல்? மலிங்கா விளக்கம்

0
877

இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். ஆனால் ஆசியக்கிண்ண தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலுமே தோற்று இலங்கை தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் மலிங்கா டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இருந்தும் விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த மலிங்கா, “உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முதல் போட்டி 17ம் திகதி தான் வருகிறது. அதற்கிடையில் 3 வாரங்கள் இருப்பதால் நன்றாக ஓய்வு எடுக்க முடியும்.

தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். முதல் போட்டிக்குள் நான் முழுவதும் குணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “சில பேருக்கு நான் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் இருப்பது பிரச்சனையாக தோன்றும்.

ஆனால் நிர்வாகம் என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளது. இதனால் முதல் போட்டியில் களமிறங்கும் வகையில் முழுவதும் தயாராவேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY