ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 30 பயணிகள் பலி

0
232

ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜிம்பாப்வேயில் வழக்கமான பேருந்து ஒன்றும், மினி பஸ் ஒன்றும் எதிர்எதிர் திசையில் ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரே- புலவாயோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பஸ்சின் டயர் திடீரென வெடித்தது. இதனால் வேகமாகச் சென்ற பஸ் நிலை தடுமாறி மறுதிசையில் வந்து கொண்டிருந்தது பஸ் மீது பயங்கரமான மோதியது.

இதில் இரண்டு பஸ் டிரைவர்கள் உள்பட 28 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து நேற்று நடைபெற்றது சேரிட்டி சரம்பா பகுதி போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியானார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் பஸ் விபத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY