உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட இடத்தில் ஆடம்பர ரெயில் நிலையம்

0
147

நியூயார்க், மார்ச் 4–அமெரிக்காவின் நியூயார்க்கில் இரட்டை கோபுரம் என அழைக்கப்பட்ட வர்த்தக மையம் கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 9–ந்தேதி விமானம் மூலம் மோதி

அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.தற்போது அதன் அருகே இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த

நிலையில் ஏற்கனவே வர்த்தக மைய கட்டிடம் இருந்த இடத்தில் ஆடம்பரமான மிக மதிப்புமிக்க ரெயில் நலையம் கட்டப்பட்டுள்ளது.

107 மீட்டர் நீளம் மற்றும் 35 மீட்டர் அகலத்தில் இந்த ரெயில் நிலையம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி மிகவும் எளிமையாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரெயில் பாதை நியூயார்க்கின் சுரங்கப் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பாதை நியூஜெர்சியையும் இணைக்கிறது.இந்த ரெயில் நிலையம் கட்ட தொடக்கத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 3.85 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.விலை மதிப்பு மிக்க இந்த ரெயில் நிலைய கட்டிடத்தை ஸ்பெயின் சுவிட்சர்லாந்தின் சாண்டியாசோ கலாட்ராவாவின் ஆக்குலஸ் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

LEAVE A REPLY