சிறுநீரக மோசடி வர்த்தகம் தொடர்பில் இந்தியர்கள் ஆறு பேர் கொழும்பில் கைது

0
205

இலங்கையில் சிறுநீரக மோசடி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஆறு இந்தியர்கள் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து சிறு தொகைக்குப் பெற்றுக் கொள்ளப்படும் சிறுநீரகத்தை பெரும் செல்வந்தர்களுக்கு பாரிய பணத்தொகைக்கு விலைபேசி விற்கும் மோசடி வர்த்தகம் தொடர்பில் அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த மோசடி தொடர்பில் இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், மோசடி வர்த்தகத்தின் சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மோசடியுடன் தொடர்புடைய மேலும் ஆறு இந்தியர்கள் தற்போது வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளதற்கான தழும்புகள் அவர்களின் உடல்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த ஆறுபேரும் சாரதி, தையல் தொழிலாளிகளாக இலங்கையில் பணியாற்றியுள்ளதுடன், வீசா அனுமதி முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கி இருந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY