விற்றமின் மாத்திரைகள் உட்கொண்டதால் மாணவர்கள் வைத்தியசாலையில்

0
222

பண்டாரவளை – பூணாகலை பகுதியில் பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வாமை, வாந்தி, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 93 மாணவர்களை பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய குறித்த பாடசாலை மாணவர்களுக்கு, நேற்று காலை உணவுக்குப் பின்னர் விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த மாத்திரைகளை தரம் 8,9,10 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கே அயன் மாத்திரைகள் உள்ளிட்ட விற்றமின்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளின் மாதிரிகளை, வைத்திய ஆய்வுப்பிரிவிற்கு பொலிஸார் அனுப்பியுள்ளனர். இந்த மாத்திரைகள் 2018ஆம் ஆண்டுவரை பாவிக்கலாம் என்று கால எல்லை குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பற்றி வித்தியாலய அதிபர் ரெ.மோகனிடம் வினவிய போது ‘’உணவு உண்ட பின்னரே, இந்த மாத்திரைகளை விழுங்க வேண்டும். ஆனால், மாணவ, மாணவிகள் உணவு உண்ணாமலேயே மாத்திரைகளை விழுங்குவதும் நோய்வாய்ப்படுவதற்கு ஒரு காரணமாகும்’’ என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY