மார்பகப் புற்றுநோய்; வருடமொன்றிற்கு சுமார் 2500 பெண்கள் பாதிப்பு

0
295

நாட்டில் வருடமொன்றிற்கு சுமார் 2,500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிப்புக்குள்ளாவதாக தேசிய புற்று நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்பகப் புற்று நோயினால் 500 இற்கும் அதிக பெண்கள் வருடமொன்றிற்கு உயிரிழப்பதாக தேசிய புற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

ஆரம்பத்திலேயே கண்டறிவதாயின் மார்பகப் புற்றுநோ​யை குணப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதத்திற்கு ஒரு தடவை பெண்கள் மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் டொக்டர் சுதத் சமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

(NF)

LEAVE A REPLY