20 ஓவர் உலக கிண்ணம்: கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி விடுவோம்: பாகிஸ்தான்

0
547

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 19–ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது.

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை தர்மசாலாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்துக்கு இமாச்சல பிரதேச காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தது.

தர்மசாலா ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அங்கு விளையாடுவது பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும். இதனால் அங்கு போட்டியை நடத்த வேண்டாம் என்று அம்மாநில காங்கிரசும், பா.ஜ.க.வும் கூறி வருகின்றன.

அம்மாநில முதல்வர் வீர்பத்ர சிங் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் “இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை தனியாக குறிவைத்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இமாசலப் பிரதேச முதல்வர் இந்தியா– பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து தினந்தோறும் ஐ.சி.சி.-யுடன் பேசி வருகிறோம். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எங்கள் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேன்றால் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற நேரிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY