(Photos) கல்லடி பாலத்தில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

0
444

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தில் வியாழக்கிழமை (03) இரவு 10.00 மணியளவில் வீதி விபத்து ஏற்பட்டதில் விபத்துக்குள்ளான நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பை சேர்ந்த நபரொருவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-BN-

batti 5batti 4batti 3batti 2

-படங்கள் அறபாத்-

LEAVE A REPLY