பந்துவீச்சில் பங்களாதேஷ் புதிய சாதனை

0
201

நேற்றைய தினம் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசியக்கிண்ண டி20 போட்டியில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எந்தவிதமான உதிரி ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணியினர் வழங்கவில்லை என்பதே அந்த சாதனையாகும்.

இதன் காரணமாக பங்களாதேஷ் அணியினரால் மேலதிக பந்துகள் எவையும் வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் பந்துவீச்சின் போது உதிரிகள் எவற்றையும் வழங்காது தமது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை நிறைவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY