தொடர்ச்சியான தோல்விகளை ஜீரணிக்க முடியவில்லை: மேத்யூஸ் கவலை

0
263

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் ஜீரணிக்க முடியாத படி இருப்பதாக அந்த அணியின் தலைவர் மேத்யூஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மோசமாக ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக வங்கதேசத்திடமும் தோற்றதால் கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இது குறித்து பேசிய இலங்கை அணியின் பொறுப்பு அணித்தலைவர் மேத்யூஸ், ”எங்களது சிறப்பான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை. இதில் எங்களது துடுப்பாட்ட துறை தான் மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

அணியில் உள்ள சீனியர் வீரர்கள் ஜொலிக்காமல் இருப்பது பின்னடைவாக உள்ளது. தோல்விகளால் எங்களது நம்பிக்கையும், மனஉறுதியும் சீர்குலைந்துள்ளது. தொடர்ச்சியான தோல்விகளை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY