ரூ.24 லட்சம் மதிப்புள்ள ஸ்டெம்பை சேதப்படுத்திய வங்கதேச வீரர்! ஐசிசி கடும் எச்சரிக்கை

0
917

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒளிரும் ஸ்டெம்பை சேதப்படுத்திய வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசனுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கிண்ணப் போட்டியில் ஒளிரும் ஸ்டெம்ப் மற்றும் பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்டெம்பின் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.

அதேபோல் 2 பெய்லின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். ஆக 2 புறமும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள ஸ்டெம்ஸ் மற்றும் பெய்ல்சின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். வீரர்கள் இதை எந்த விதத்திலும் தொடக் கூடாது என்று ஏற்கனவே ஐசிசி எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஆசியக்கிண்ண தொடரில் நேற்று வங்கதேசம்- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்தில் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் விரக்தியில் துடுப்பாட்ட மட்டையால் ஸ்டெம்பை தாக்கினார். இது ஐசிசியின் ஒழுக்க விதி லெவன் 1 படி குற்றமாகும்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட சாகிப், களந டுவர்களிடம் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது தவறை ஒப்புக் கொண்டார். இருப்பினும் அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY