MH370 விமானத்தின் பாகங்கள் சில கண்டுபிடிப்பு

0
68

காணாமல் போனதாகக் கருதப்படும் மலேசிய விமானமான MH370 இன் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவில் இருந்து குறித்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன எம் எச் 370 விமானத்தினுடயது என சந்தேகிக்கப்படும் குறித்த பாகங்களை ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கில் கண்டெடுத்ததாக மலேஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பாகம் எம் எச் விமானத்தினுடையது என்பதற்கு உயர் சாதகத்தன்மைகள் காணப்படுவதாக மலேஷிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

போயிங் 777 என்ற ரக விமாமொன்றின் பாகமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்படுகின்றது

எம் எச் 370 விமானமும் போயிங் 777 என்ற ரகத்தை சார்ந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி 12 ஊழியர்களுடனும் 227 பயணிகளுடனும் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த எம் எச் 370 விமானம் காணாமல் போயிருந்த நிலையில் விமானம் தொடர்பில் தகவல்கள் ஏதுமின்றிய நிலையில் குறித்த விடயம் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர், எம் எச் 370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது என்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிந்துவிட்டதாக மலேசிய பிரதமர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY