இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள்

0
131

உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளன.

இலங்கை கிரிக்கெட்டு அணி மீது கடந்த 2009-03-3 ஆம் திகதியன்று பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.உலகமளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

திலான் சமரவீர, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்கக்கார ,மஹேல ஜயவர்தன, சமிந்தவாஸ் ஆகியோர் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY