ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை தேடும் சான் பிரான்சிஸ்கோ நகரம்

0
143

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது.

தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.

LEAVE A REPLY