திருமலை மாவட்டத்தின் மூதூர் சீதனவெளி கிராமத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கான ஆரம்ப நிகழ்வு

0
352

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சீதனவெளி கிராமத்தில் புதிய ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 2016.03.02ஆந்திகதி புதன்கிழமை காலை 10.00 மணிளயவில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. இரா. சம்மந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கட்டிடத்திற்கான முதலாவது ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜெ. ஜனார்த்தன் மற்றும் கு. நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்ஆடைத்தொழிற்சாலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. ஆர்.எம். அன்வர் அவர்களிடம் வினவியபோது,

சுமார் 3.6 ஏக்கர் நிலப் பரப்பில் 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற இவ்ஆடைத்தொழிற்சாலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 350 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென தெரிவித்தார்.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY