றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில்: ஷிப்லி பாறூக் நிதி

0
164

புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதிலினை அமைப்பதற்கு முதல்கட்டமாக 200,000.00 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 150,000.00 ரூபாயும் கடந்த மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலுக்கு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பள்ளிவாயலின் சுற்றுமதிலினை சம்பூர்ணமாக்குவதற்கு மூன்றாம் கட்டமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவரிகளின், 2015ம் ஆண்டின் மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 115,000.00 ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது, அதன் பிரகாரம் தற்பொழுது பள்ளிவாயலின் சுற்றுமதில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

சில தினங்களுக்கு முன்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சுற்றுமதில் கட்டுமான பணியினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், சுற்றுமதிலை நேர்த்தியாக அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி எதிர் காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி செயற்பாடுகளை இப் பள்ளிவாயலுக்கும், இப் பிரதேசத்திற்கும் முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

0a961ea8-488f-4cbe-b0ad-4114b2468b33 1d5681c4-d983-4c12-bc3f-4a3a7c7b87de bc5c4412-4d1a-4f63-b163-1114a2ba740d fa4f840d-bdfc-4769-ae97-77a7eb80f91d

LEAVE A REPLY